பாஜ செய்தித் தொடர்பாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான சுதான்ஷு திரிவேதி, “வெளிநாட்டு சக்திகளுடன்” இணைந்து மத்திய அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி செய்கின்றன என குற்றம்சாட்டினார். டில்லியில் ஊடகங்களை சந்தித்த போது அவர் இதை தெரிவித்தார்.
சில “தீய சக்திகள்” சொந்த ஆதாயத்துக்காக அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது, சமூகத்தில் பிளவுகளை உருவாக்குவது, இந்திய கலாசாரம் மற்றும் மதத்தின் மீது வெறுப்பை பரப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இத்தகைய சக்திகள் நாடு முன்னேறுவதை விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
ஒரு கோரிக்கை நிறைவேறியதும் மற்றொரு கோரிக்கை உருவாகும் நிலை இருப்பதாக கூறிய அவர், பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னால் “ஒரே மையப்புள்ளி” இருப்பதாக வாதிட்டார். வெளிநாட்டு கூறுகளுடன் சேர்ந்து எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன; இதை மக்கள் அடையாளம் காண வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், “ராகுல் வியட்நாமிலிருந்து திரும்பியதும் ஆட்சி மாறும்” என சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாக குறிப்பிடினார். ராவத்துக்கு அப்படி என்ன தகவல் உள்ளது என கேள்வி எழுப்பிய திரிவேதி, அந்த பேச்சுக்குப் பின்னாலும் “வெளிநாட்டு சக்திகள்” இருப்பதாக குற்றம்சாட்டினார்.





