சீனாவின் புஜியன் மாகாணம் ஜாங்பிங் நகரில், 12வது மாடி அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னலில் இருந்து ஒரு குழந்தை அந்தரத்தில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தை ஜன்னலை தாண்ட முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது ஜன்னல் கிரில் கம்பிகளுக்குள் குழந்தையின் தலை சிக்கி, தலை மற்றும் கைகள் உள்ளே இருக்க உடல் முழுவதும் வெளியில் தொங்கிய நிலையில் இருந்தது.
இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடிச்சென்று உதவினர். குழந்தை கீழே விழாமல் இருக்க, கீழிருந்து ஒரு ஸ்டூலை முட்டுக் கொடுத்து இருவர் பிடித்துக் கொண்டிருந்தனர்.
பின்னர் மீட்புப் படையினர் வீட்டுக்குள் நுழைந்து ஜன்னல் வழியாக குழந்தையை பத்திரமாக உள்ளே இழுத்து மீட்டனர். அந்த சில திக்…திக்… வினாடிகள் காண்போரை பீதியில் ஆழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டது.





