சென்னை: மாமன்னர் ராஜராஜ சோழனின் 1041வது சதய விழாவை முன்னிட்டு முதல்வர் விஜய் அறிக்கை வெளியிட்டு, சோழ மன்னரின் வரலாற்றுப் பெருமைக்கு புகழ்வணக்கம் செலுத்தினார்.

தமிழர்களின் பெருமையை உலக அரங்கில் நிலைநாட்டியதுடன், தமிழர் கட்டடக்கலை மற்றும் நிர்வாகத் திறனின் மகத்துவத்தையும் அவர் வெளிப்படுத்தியதாக முதல்வர் குறிப்பிட்டார்.

ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரிய கோயில், தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் கட்டடக்கலைச் சிறப்பை உலகிற்கு எடுத்துச் சொல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழர் பெருமையைப் போற்ற வேண்டும் என்றும், தமிழர் வரலாறும் பண்பாடும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படும் என்றும் முதல்வர் விஜய் வலியுறுத்தினார்.