விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டியில் இருந்து மாயமான சிறுமி வழக்கில், 10 நாட்களாக எந்தத் துப்பும் கிடைக்காத நிலையில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள், அக்.11 இரவு பிறந்தநாள் கொண்டாடிய பின் பெற்றோருடன் வீட்டிலேயே தூங்கியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மறுநாள் காலை சிறுமி காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

தேடுதல் மற்றும் விசாரணையில் 10 நாட்களாக முன்னேற்றம் இல்லாததால், இந்த வழக்கில் புதிய உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.