சென்னை: ‘கிரானைட்’ வீரமணி தொடர்பான வழக்கில் சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.ஐ.டி.) விசாரணைக்கு ஆளான ஐ.பி.எஸ். அதிகாரி ராதிகாவை, பணியிடம் இன்றி “காத்திருப்போர் பட்டியலில்” வைத்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தி.மு.க. ஆட்சிக் காலத்தில், சென்னை போலீசின் மத்திய குற்றப்பிரிவில் கூடுதல் கமிஷனராக ராதிகா பணியாற்றினார். பின்னர், டி.ஜி.பி. அலுவலகத்தில் நிர்வாகப் பிரிவு ஐ.ஜி.யாக அவர் பணியில் இருந்தார்.
சிறுமியருக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றச்சாட்டு தொடர்பாக வீரமணி மீது புகார் வந்த காலத்தில் ராதிகா சென்னை போலீசில் பணியாற்றியதால், தற்போது எஸ்.ஐ.டி. அதிகாரிகள் அவரை விசாரித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, டி.ஜி.பி. அலுவலக நிர்வாகப் பிரிவுக்கு திருச்சி கமிஷனராக இருந்த காமினி நியமிக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவி மாற்றத்தால் ராதிகா காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே கூடுதல் டி.ஜி.பி. அருண் மற்றும் டி.எஸ்.பி. யாஸ்மின் ஆகியோரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பு கூறியது.





