சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஒரு புதிய மேம்பால (எலிவேட்டட் காரிடார்) திட்டத்திற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
இந்த திட்டம் நகரின் முக்கிய பாதையான லைட் ஹவுஸ் முதல் அடையாறு திருவிக பாலம் வரை சுமார் 4 கி.மீ. நீளத்தில் அமைக்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக, திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதில் சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்து, தொழில்நுட்ப விவரங்கள் உள்ளிட்ட அம்சங்கள் தொகுக்கப்படும்.
சாத்தியக்கூறு ஆய்வு முடிந்த பிறகு, மேம்பாலம் கட்டுமானத்திற்கான டெண்டர் அழைப்பது அடுத்த கட்டமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைட் ஹவுஸ்–அடையாறு வழித்தடத்தில் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.




