டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி, போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்கை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது; பின்னர் இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் அமைதியை ஏற்படுத்தும் ஆக்கப்பூர்வமான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று மோடி தெரிவித்தார். பிராந்திய மற்றும் உலகளாவிய நிகழ்வுகள் குறித்தும் விரிவாக விவாதித்ததாக கூறினார்.

கலாசாரம், கல்வி, விளையாட்டு, சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த முடிவு செய்துள்ளதாக மோடி தெரிவித்தார். இந்தியா–போலந்து இருதரப்பு பொருளாதாரம் வளர்ந்து வருவதால் புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு, விண்வெளி மற்றும் அணுசக்தி துறைகளில் உறவை வலுப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அனைத்து துறைகளிலும் இந்தியாவுடன் இணைந்து செயல்படவும், இணைந்து உற்பத்தியில் ஈடுபடவும் போலந்து நிறுவனங்களை அழைத்தார்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்தியா–போலந்து பொருளாதார உறவை இன்னும் வலுப்படுத்தும் என்றும் மோடி தெரிவித்தார்.