இந்த ஆண்டின் நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவுக்காக 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயை சந்தித்த நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் ஹாஜா நஜுமுதீன் சாஹிப் மற்றும் அறங்காவலர்களிடம், அந்த அரசாணை வழங்கப்பட்டது. அறங்காவலர்கள் முதல்வரிடம் நேரில் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஷாஜகான் கூறுகையில், நவம்பர் 10 முதல் விழா நடைபெற உள்ளதாகவும், அதற்காக 45 கிலோ சந்தனக்கட்டைகளை விலையில்லாமல் வழங்கும் அரசாணையை முதல்வரை சந்தித்து பெற்றதாகவும் தெரிவித்தார்.

விழாவை சிறப்பாக நடத்த நாளை ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும் என முதல்வர் கூறியுள்ளதாகவும், ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். மேலும், சந்தனக்கட்டைகள் வழங்குவதில் எந்த அரசியல் தலையீடும் இல்லை என்றும், நாகூர் தர்காவுக்கு யானை கொண்டு வருவதற்கான நடவடிக்கையை விரைவுபடுத்த முதல்வர் உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.