சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று (அக்.22) தமிழகத்தின் 17 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலெர்ட் அறிவித்துள்ளது.

வானிலை மைய இயக்குநர் வி.ஆர்.துரை கூறுகையில், தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். மேலும், அக்.26 வரை தமிழகத்தில் கனமழை தொடரக்கூடும் என்றும் கூறினார்.

ஆரஞ்சு அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை.

இதற்கிடையில் திருச்சி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாமக்கல், விழுப்புரம், திருப்பூர், கரூர் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டமாக இருக்கும்; சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.