தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்மேற்கு வங்கக்கடலில் அக்டோபர் 21 காலை 5.30 மணியளவில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி, 8.30 மணியளவிலும் அதே பகுதியில் நிலவுகிறது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அக்டோபர் 22-ம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மேலும் திருச்சி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாமக்கல், விழுப்புரம், திருப்பூர், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் இன்று மற்றும் நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.





