எரிபொருள் உற்பத்தி செய்யும் வளைகுடா நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருக்கும் என்ற பொதுக் கருத்துக்கு மாறாக, துபாயை விட இந்தியாவில் சில்லரை எரிபொருள் விலை குறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

யுஏஇ-யின் துபாயுடன் ஒப்பிடுகையில், தலைநகர் டில்லியில் இரு எரிபொருட்களும் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி துபாயில் ‘ஸ்பெஷல் 95’ பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.04 ஆக இருக்கும் நிலையில், டில்லியில் ரூ.102.12 ஆக உள்ளது. இதனால் ரூ.7.82 குறைவாகிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.107.76 ஆக உள்ளது.

டீசலில் விலை வித்தியாசம் மேலும் அதிகமாக உள்ளது. துபாயில் டீசல் லிட்டருக்கு ரூ.123.41 ஆக இருக்கும் நிலையில், டில்லியில் ரூ.95.20 ஆக உள்ளது. இதனால் டில்லியில் ரூ.28.21 குறைவாகிறது. சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.55 ஆக பதிவாகியுள்ளது.

இந்த மாதம் 1ஆம் தேதி முதல் யுஏஇ எரிபொருள் விலையை கணிசமாக உயர்த்தியதே துபாயில் விலை அதிகமாக இருப்பதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.