பேஸ்புக் சமூக வலைதளத்தை இயக்கும் மெட்டா நிறுவனத்திற்கு, பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் ரகசிய தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் ரூ.2.36 லட்சம் கோடி அபராதம் விதித்து அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநில நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த விவகாரம் 2016 அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சார காலத்துடன் தொடர்புடையது. அப்போது ‘கேம்பிரிட்ஜ் அனாலிடிகா’ என்ற அரசியல் ஆலோசக நிறுவனம், சுமார் 8.7 கோடி பேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து 2021ல் நியூ மெக்சிகோ மாநில அட்டர்னி ஜெனரல் ராகுல் டோரஸ், மெட்டா நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மெட்டா நிறுவனம் 43 லட்சத்திற்கும் அதிகமான முறை மீறியதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இந்த அபராதம் அமெரிக்க கார்ப்பரேட் வரலாற்றில் பதிவான மிகப் பெரிய அபராதங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.