சென்னை நுங்கம்பாக்கம் பத்மா சேஷாத்ரி பால பவன் (PSBB) பள்ளியில் ‘ஆயக்கலைகள் 64’ என்ற தலைப்பில் 2 நாள் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியை பிரபல பரதநாட்டியக் கலைஞரும், நிருத்யோதயா அமைப்பின் இயக்குநருமான பத்மா சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

கண்காட்சியில் பாரம்பரிய கலைவடிவங்களுடன் நவீன அறிவுத் தளங்களை இணைத்து வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த கண்காட்சி பள்ளி வளாகத்தில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.