சென்னை வானிலை மையம் இன்று (வியாழன்) திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் அறிவித்து, அங்கு மிக அதிகனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
மேலும் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் வழங்கப்பட்டுள்ளதுடன், அங்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் 27 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதில் ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் இடம்பெறுகின்றன.
நாளை (அக்டோபர் 24) திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 33 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.





