செங்கடல் பகுதியில் இந்திய சொகுசுக் கப்பலை சவுதி அரேபியப் படைகள் குறிவைத்து தாக்கியதாக ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கப்பலில் இருந்த 14 இந்தியர்களையும் தாங்கள் பத்திரமாக மீட்டதாக ஹவுதி தரப்பு தெரிவித்துள்ளது.

ஹவுதிகளின் செய்தித் தொடர்பாளர் யஹியா சரீ, மீட்கப்பட்ட இந்தியர்கள் குறித்த முழுமையான விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என கூறினார்.

இந்த நடவடிக்கை செங்கடல் பகுதியில் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக கூறிய ஹவுதி அமைப்பு, இதற்கு எதிராக சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் உள்ள கிங் பஹத் பன்னாட்டு விமான நிலையத்தின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில், ஒரு இந்தியர் உட்பட 2 பேர் உயிரிழந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.