தமிழக அரசு, சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) மாத ஊதியத்தை ரூ.1.05 லட்சத்திலிருந்து ரூ.1.80 லட்சமாக உயர்த்தி அரசாணை (GO) வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிகளின்படி, அவசர கால மருத்துவச் செலவுக்காக ரூ.12,000 வரை வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவித்திருந்த திட்டத்தின் தொடர்ச்சியாக, எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கப்படும் என்றும், டிரைவர் மற்றும் எரிபொருள் செலவுக்காக ரூ.75,000 மற்றும் அலுவலக உதவியாளரை நியமித்து ஊதியம் வழங்க ரூ.25,000 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, கார் வழங்குவதற்காக ரூ.15 லட்சம் வரை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த தொகை மாவட்ட கலெக்டர்கள் வாயிலாக விடுவிக்கப்படவுள்ள நிலையில், டிரைவர், எரிபொருள் மற்றும் உதவியாளர் ஊதியம் உள்ளிட்ட கூறுகள் சேர்ந்து மாத ஊதியம் ரூ.1.80 லட்சமாக உயர்ந்துள்ளது.