வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமீபத்தில் பல நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியதாக கூறினார். அந்த சந்திப்புகளில் கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சையும் இடம்பெற்றதாக தெரிவித்தார்.

தெற்கு கரோலினாவில் நடந்த பேரணியில் பேசிய டிரம்ப், அட்லாண்டிக் பெருங்கடலுக்கு தனது பெயரை சூட்ட வேண்டும் என்ற விருப்பத்தை பிச்சையிடம் தெரிவித்ததாகவும், அதை செய்ய முடியுமா என்று கேட்டதாகவும் கூறினார்.

அதற்கு பிச்சை, “இல்லை, நான் அதை செய்ய மாட்டேன்; அப்படி செய்ய சொல்லாதீர்கள். அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டி பல நாடுகள் உள்ளதால் பெயரை மாற்ற முடியாது” என்று கூறியதாக டிரம்ப் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த எண்ணத்தை கைவிட்டதாகவும், அது “அட்லாண்டிக் பெருங்கடல்” என்ற பெயரிலேயே இருக்க வேண்டும் என்று நினைப்பதாகவும் டிரம்ப் கூறினார்.