நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் அமெரிக்க தபால் துறை (USPS) சிறப்பு தபால்தலையை வெளியிட்டுள்ளது.
இந்த தபால்தலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கலைஞர் சங்கீதா புதடா உருவாக்கிய நுணுக்கமான ரங்கோலி வடிவம் இடம் பெற்றுள்ளது. இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட அவர் நீண்டகாலமாக ஹூஸ்டனில் வசித்து வருகிறார்; கடந்த 30 ஆண்டுகளாக பாரம்பரிய ரங்கோலி கலைப்பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி தபால்தலையில் இடம்பெறும் ரங்கோலி வடிவத்தை சங்கீதா புதடா சிறப்பாக வடிவமைத்து வழங்கியுள்ளார்.
இந்த தபால்தலை வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
தீபாவளிக்காக அமெரிக்க தபால் துறை தபால்தலை வெளியிடுவது இது இரண்டாவது முறை. இதற்கு முன் 2016ஆம் ஆண்டில் முதன்முறையாக இத்தகைய தபால்தலை வெளியிடப்பட்டது.





