சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், அக்.24 அன்று நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே நாளில் கோவை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அக்.24 அன்று கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர், திருப்பூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய 24 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அக்.25 அன்று திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களுக்கு அதி கனமழை (ரெட் அலெர்ட்) அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களுக்கு மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்); மேலும் கன்னியாகுமரி, விருதுநகர், நாமக்கல், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கனமழை (மஞ்சள் அலெர்ட்) குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்.26 அன்று புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) வாய்ப்பு இருப்பதாகவும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை (மஞ்சள் அலெர்ட்) வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.





