பாகிஸ்தானில் சமையல் எரிவாயு விலை கணிசமாக உயர்ந்துள்ளது. வீட்டு பயன்பாட்டுக்கான ஒரு சிலிண்டர் விலை பாகிஸ்தான் ரூபாயில் 10,000-ஐ தாண்டி, இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.3,500 அளவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லாகூரிலிருந்து வரும் தகவலின்படி, சமையல் எரிவாயு தேவையின் சுமார் 70% பகுதியை பாகிஸ்தான் இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது. இதனால் வெளிப்புற சூழ்நிலைகளால் விநியோகம் எளிதில் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
ஈரான்–அமெரிக்கா மோதல் காரணமாக தாப்தான் எல்லை தற்காலிகமாக மூடப்பட்டதால், தரை வழியாக நடந்த எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் விளைவாக நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஒரு கிலோ சமையல் எரிவாயு 750 பாக். ரூபாய்க்கு விற்கப்படுவதுடன், சிலிண்டர் விலை 10,000 பாக். ரூபாயை தாண்டி உயர்ந்துள்ளது.





