சர்வதேச நிலவரங்களின் தாக்கத்தால் தமிழகத்தில் தங்க விலை கடந்த சில நாட்களாக ஏற்றத் தாழ்வுடன் நகர்கிறது. திங்கள் (அக்.19) 22 காரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.1,08,560 ஆகவும், கிராமுக்கு ரூ.13,570 ஆகவும் விற்பனை ஆனது.

அதன்பின் செவ்வாய் (அக்.20) முதல் விலை சரிவைத் தொடங்கியது. அக்.20 அன்று சவரன் ரூ.1,07,920 ஆகவும், அக்.21 அன்று ரூ.1,07,120 ஆகவும், அக்.22 அன்று ரூ.1,05,880 ஆகவும் குறைந்தது.

வெள்ளி (அக்.23) அன்று தங்கம் மேலும் சரிந்து சவரன் ரூ.1,04,480 ஆகவும், கிராம் ரூ.13,060 ஆகவும் விற்பனை ஆனது. இதனால் 5 நாட்களில் சவரனுக்கு மொத்தமாக ரூ.4,080 குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சனி (அக்.24) தங்க விலை சற்று மீண்டுள்ளது. 22 காரட் தங்கம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.1,04,560 ஆகவும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.13,070 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று மேலும் சரிவு காணப்படுகிறது. கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.220 ஆகவும், கிலோ ரூ.5,000 குறைந்து ரூ.2,20,000 ஆகவும் விற்பனை நடைபெறுகிறது.