சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞரணி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் பேசிய கருத்துகள், நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனை குறிவைத்து மறைமுகமாக சாடியதாக சமூக வலைதளங்களில் விவாதமாகி, ரசிகர்களிடையே கடும் எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த உரையில், 2029-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் வெற்றி தமிழகத்திலிருந்து உருவாகும் என்றும், அதை உடைக்க “புதிய புதிய நடிகர்கள்” டெல்லியில் முகாமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஆனால் யாருடைய பெயரையும் நேரடியாக குறிப்பிடவில்லை.
மேலும், திமுக குறித்து கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்த ஆதவ், டெல்லியில் முகாமிட்ட நடிகர் யார், பொங்கலுக்கு டெல்லி சென்ற நடிகர் யார் என்பதையும் “எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என கூறி, மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.
இந்த பேச்சு, தனுஷ் தனது நற்பணி இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற முயற்சிப்பதாகவும் அதற்காக டெல்லியில் முகாமிட்டுள்ளதாகவும் வெளியான தகவல்களை பின்னணியாகக் கொண்டு அவரை குறித்ததாக பேசப்படுகிறது. அதேபோல், கடந்த ஜனவரியில் பொங்கல் பண்டிகை நேரத்தில் அப்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் டெல்லி இல்லத்தில் நடந்த பொங்கல் விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றதை குறிப்பிட்டே ஆதவ் பேசியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அமைச்சர் ஆதவுக்கும் ஆளும் தரப்புக்கும் எதிராக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சில பதிவுகளில், “கட்சி தொடங்கும் முன்பே பயந்துவிட்டார்கள்” என்ற வகையிலும் விமர்சனங்கள் இடம் பெற்றுள்ளன.




