பெங்களூரு: பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் சென்னை அணியின் முக்கிய முகமாக இருக்கும் எம்.எஸ். தோனியின் எதிர்காலம் குறித்து மீண்டும் விவாதம் எழுந்துள்ளது.

45 வயதிலும் சென்னை அணியுடன் தொடர்ந்து இணைந்திருக்கும் தோனி, கெண்டைக்கால் காயத்தால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த சீசனில் அவர் ஒரு போட்டியிலும் விளையாடாததால், எப்போது வேண்டுமானாலும் ஓய்வை அறிவிக்கலாம் என்ற பேச்சும் பரவியது.

அடுத்த ஆண்டு நடைபெறும் தொடரில் அவர் மீண்டும் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது. இந்த நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற தோனியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்தார். மருத்துவ பரிசோதனைகள் மற்றும் உடற்தகுதி நிலையைப் பொறுத்து டிசம்பர் மாதத்திற்குள் தீர்மானிப்பேன் என்றும் கூறினார்.

மீண்டும் விளையாடத் தகுதி உள்ளதா என்பதை மருத்துவர்கள் பரிசோதித்து அறிக்கை தர வேண்டும் என குறிப்பிட்ட தோனி, “இந்த வின்டேஜ் வாகனத்தை சாலையில் ஓட வைப்பது அவர்களிடம்தான்” என்று நகைச்சுவையாகவும் பேசினார்.