தீபாவளியை முன்னிட்டு மஹாராஷ்டிராவில் உணவுப் பொருட்களில் கலப்படம் மற்றும் பாதுகாப்பு விதிமீறல்களை கட்டுப்படுத்த, உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் துக்காராம் முண்டே தலைமையில் அதிகாரிகள் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கையில் தரம் குறைந்த உணவுப் பொருட்கள், குட்கா மற்றும் காலாவதியான பொருட்களின் கையிருப்புகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.16.92 கோடி என கூறப்படுகிறது.
மேலும், காலாவதியான 8,392 கிலோ உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன. உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய நிறுவனங்கள் மீது துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக 68 நிறுவனங்களின் உரிமங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன. 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டிகை காலத்தில் கலப்படத்தைத் தடுக்க சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.




