2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்திய பாரா வீரர்கள் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தி, மொத்தம் 114 பதக்கங்களை கைப்பற்றினர். இந்தப் பதக்கப் பட்டியலில் இந்தியாவின் 97 வீரர்கள் பங்களித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது; இது போட்டிகளில் இந்தியா இதுவரை பெற்ற சிறந்த செயல்பாடாகும்.

மாநில அளவில் ஹரியானா 24 பதக்கம் வென்ற வீரர்களுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக உத்தரப் பிரதேசம் 13 வீரர்களுடன் இடம்பிடித்துள்ளது. இந்த வரிசையில் தமிழகம் மூன்றாம் இடம் பெற்றுள்ளது; தமிழகத்தைச் சேர்ந்த 9 வீரர், வீராங்கனைகள் 14 பதக்கங்களை வென்றுள்ளனர்.

இந்த சாதனை குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவில், 114 பதக்கங்களை வென்று இந்தியா இதுவரை கண்டிராத மிகச்சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக கூறி, இதை “வரலாற்றுச் சாதனை” என பாராட்டினார். இது ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கும் தருணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அணியில் இடம்பெற்ற ஒவ்வொரு வீரரின் மன உறுதியையும் பாராட்டிய பிரதமர், இந்த சாதனையில் அனைவரும் பங்களித்ததுடன், தங்கள் வெற்றிகளின் மூலம் எண்ணற்ற இந்தியர்களுக்கு ஊக்கமளித்துள்ளதாக தெரிவித்தார்.