அமெரிக்காவின் உள்நாட்டு எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்கும் முயற்சியாக, சுமார் 3 லட்சம் பீப்பாய் (சுமார் 40,000 டன்) டீசலை ஏற்றிக்கொண்டு மூன்று ரஷ்ய டேங்கர் கப்பல்கள் அமெரிக்கா நோக்கி புறப்பட்டுள்ளன.
ஈரான்–அமெரிக்கா இடையேயான போருக்குப் பிறகு ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததுடன், அமெரிக்காவிலும் குறிப்பாக டீசல் பற்றாக்குறையால் விலை அதிகரித்ததாக தகவல் தெரிவிக்கிறது.
விலை உயர்வை கட்டுக்குள் வைத்தும் விநியோகத்தை நிலைநிறுத்தவும் ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய அமெரிக்கா முடிவு செய்ததாக கூறப்படுகிறது. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகளை அமெரிக்கா பின்னர் நீக்கியதாகவும், இதற்கிடையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் பேசியதாகவும் செய்தி குறிப்பிடுகிறது.
ஒப்பந்தத்தின் படி ரஷ்யாவின் பிரிமோர்ஸ்க் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் புறப்பட்டு, நவம்பர் 7-ஆம் தேதி நியூயார்க் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023க்கு பிறகு ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவுக்கு நடைபெறும் முதல் டீசல் விநியோகம் இதுவெனவும் கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிலும் உக்ரைனிலும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இதை “வலுவான நட்பின் பலவீனமான முடிவு” என குறிப்பிட்டதாகவும், அதற்கு பதிலாக டிரம்ப் “ரஷ்யாவுடனான போர் முடிவுக்கு வர உக்ரைன் விரும்பவில்லை” என தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




