சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், அக்.26 அன்று நாகை மாவட்டத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்கள்: மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்.
தமிழகத்தில் நாளை முதல் மழைப்பொழிவு படிப்படியாக குறையும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நாளை முதல் மாநிலத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




