ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரியாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் விமான நிலையங்களை குறிவைத்து நடந்த தாக்குதல்களில் இதுவரை 14 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

முஸ்லிம்களின் புனித தலமான மெக்காவை நோக்கி வீசப்பட்ட ஏவுகணைகளை சவுதி அரேபியா வெற்றிகரமாக இடைமறித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் பதற்றம் நிலவுகிறது.

இந்த சூழலில், சவுதி அரேபியாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தி, அவசர உதவிக்கான தொடர்பு எண்களையும் வெளியிட்டுள்ளது.

மேலும் புதிய எச்சரிக்கையாக, ஏவுகணை அல்லது ட்ரோன்களை இடைமறித்து தாக்கும் காட்சிகள், அல்லது அவை விழுந்து சேதமடைந்த பகுதிகளை படம் அல்லது வீடியோ எடுப்பதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. இத்தகைய பதிவுகளை சமூக வலைதளங்களில் பகிர்வது சட்டப்படி குற்றம் என சவுதி பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளதாகவும், சவுதி சட்டங்களை மீறினால் சிறை உள்ளிட்ட தண்டனைகள் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.