கர்நாடகாவில் இருந்து ஒரு சிறுமியின் அபூர்வமான இசைத் திறமை, சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
உத்தர கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்வரஸ்ரீக்கு வயது 2 ஆண்டு 10 மாதங்கள். மிகக் குறைந்த வயதிலேயே தபேலா வாசித்து, 12 தாளங்களை வாசித்ததாக வெளியான பதிவுகள் வலைதளவாசிகளிடம் பாராட்டைப் பெற்றன.
பலரும் இதை உத்தர கன்னடாவுக்கான பெருமையான தருணம் எனக் குறிப்பிட்டுள்ளனர். சிலர் “சரஸ்வதி தேவியின் ஆசீர்வாதம் பெற்ற குழந்தை” எனக் கருத்து தெரிவித்ததுடன், குழந்தையின் திறமைக்கு ஏற்ற பெயரை வைத்த பெற்றோரையும் பாராட்டினர்.
இந்தச் சிறுமி தபேலாவில் 12 தாளங்களை வாசித்த சாதனை, ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ இதழில் பதிவாகி அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்றுள்ளது.



