சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு செய்தார்.

மழை அதிகரிப்பதால் ஏரிக்கு வரும் நீர் வரத்து படிப்படியாக உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,646 மில்லியன் கன அடி ஆகும்.

தற்போது ஏரியில் 1,488 மில்லியன் கன அடி நீர் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 150 கன அடி நீர் வரத்து உள்ளதாகவும், 208 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாகவும் கூறப்பட்டது.

ஆய்வின்போது ஏரியின் ஐந்து கண் மற்றும் 19 கண் மதகுகள் பகுதிகளில் நிலவரத்தை முதல்வர் பார்வையிட்டார். நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து தொடர்பான விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.