பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய முக்கியத் தேர்தலில் இஸ்ரேல் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
தற்போதைய பிரதமர் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரிக் கூட்டணிக்கும், நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசென்கோட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நெதன்யாகுவை பதவியிலிருந்து அகற்ற பல்வேறு கட்சிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
எதிர்க்கட்சி சற்றே முன்னிலையில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களைப் பெறுவது சவாலாகவே உள்ளது. போரின் பின்னடைவுகள், பிணைக் கைதிகள் தொடர்பான விவகாரம் மற்றும் நெதன்யாகு எதிர்கொள்ளும் ஊழல் வழக்குகள் ஆகியவை அவருக்கு எதிரான அதிருப்தியை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன; ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 61 இடங்கள் தேவை. ஓட்டுப்பதிவு முடிந்து அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகி, கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்த பின்னரே அடுத்த பிரதமர் யார் என்பது உறுதி செய்யப்படும்.




