ரூ.100 கோடி அளவிலான மோசடி குற்றச்சாட்டில், பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் மகேஷை சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் கைது செய்துள்ளதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அங்கீகாரம் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி பணம் வசூலித்து ஏமாற்றியதாக புகார்கள் வந்ததையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியதாக போலீசார் கூறினர்.
இந்த வழக்கில் தொடர்புடைய அரசகுமார், சுரேஷ், ராஜா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மகேஷ் மற்றும் அவரது உதவியாளர்கள் தொடர்புடைய இடங்களில் திருச்சி, சென்னை, கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அக்.26 அன்று சென்னை அமைந்தகரையில் மகேஷ் கைது செய்யப்பட்டு காவல் ஆணையரகத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்குப் பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.




