தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அரசு நிரூபிக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சம்பந்தப்பட்ட வழக்கில் ஏற்கனவே தன்னிடம் சுமார் ஏழு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்ததாகவும் கூறினார்.

இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், முன்ஜாமின் வழங்கக் கூடாது என்பதற்காக அரசு தரப்பில் சில கருத்துகள் முன்வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அந்த வாதங்கள் அனைத்தும் “கதை” போல இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டால் உடனடியாக கைது செய்யும் நோக்கத்துடன் செயல்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.