சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் முன்பு நடந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து திமுக எம்எல்ஏ சேகர்பாபு மற்றும் திமுக எம்பி கலாநிதி வீராசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அக்.26 மாலை, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி வரை லஞ்சம் வசூலித்ததாக கூறப்படும் புகாரில் திமுக முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது செய்யப்பட்டார்.

அந்த நேரத்தில் சேகர்பாபு, கலாநிதி வீராசாமி உள்ளிட்ட திமுகவினர் போலீசாரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் அவமரியாதையாக பேசுதல் என இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.