தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தர ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் திமுக முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்டதிலிருந்து புழல் சிறை வளாகத்திற்குள் அழைத்துச் செல்லப்படும் வரை, போலீசாரை சூழ்ந்து திமுகவினர் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
மகேஷை சிறையில் அடைப்பதற்கு முன்பாக, மகேஷின் ஆதரவாளராக குறிப்பிடப்படும் வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் ‘டீட்டா’ சரவணன் ஆவேசமாக பேசினார். ‘கரூர் சம்பவத்தின் போதே கதையை முடித்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா’ என்ற பொருளில் அவர் மகேஷிடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சு தொடர்பாக வந்த புகாரின் பேரில் சரவணன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர் தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில், போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.




