2023ஆம் ஆண்டு ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு நடைபெற்ற இஸ்ரேல் பொதுத்தேர்தலைத் தொடர்ந்து வெளியான கருத்துக்கணிப்பு, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அணிக்கு பின்னடைவு இருக்கலாம் என சுட்டிக்காட்டுகிறது. இந்தத் தேர்தலில் முன்பெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக வாக்குப்பதிவு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 20 ஆண்டுகளாக பிரதமராக இருந்து வரும் நெதன்யாகு, ஹமாஸ் மற்றும் ஈரான் எதிராக கடுமையாக செயல்படுவதாக உறுதியளித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

கருத்துக்கணிப்பின் படி, முன்னாள் ராணுவத் தலைவரான காடி ஐசென்காட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி, நெதன்யாகுவின் கூட்டணி கட்சிகளை விட சிறிய அளவில் முன்னிலை பெறக்கூடும் என கூறப்படுகிறது.

இந்த கணிப்பில் எதிர்க்கட்சிக் கூட்டணி 52 முதல் 53 இடங்கள் வரை பெறலாம் என்றும், நெதன்யாகு அணிக்கு சுமார் 50 இடங்கள் கிடைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சுமார் 25 இடங்களுடன் நெதன்யாகுவின் ‘லிக்குட்’ கட்சியே பார்லிமென்டில் தனிப்பெரும் கட்சியாகத் தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.