சுமார் ரூ.10.34 லட்சம் கோடி மதிப்பீடு கொண்ட ஜியோ பிளாட்பார்ம்ஸ், அக்டோபர் 28 அன்று பங்குச்சந்தைகளில் பட்டியலாகிறது. காலை 10 மணி முதல் பங்குகள் வர்த்தகத்திற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐபிஓக்கு பெரும் வரவேற்பு கிடைத்து, இறுதியில் மொத்தமாக 22.19 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. உலகளவில் ஒரு கோடிக்கும் மேலான விண்ணப்பங்களை பெற்ற முதல் ஐபிஓ என்ற சாதனையாகவும் இது குறிப்பிடப்படுகிறது.

பிரிவு வாரியாக, தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் (QIB) பகுதியில் 70.55 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. நிறுவனமல்லாத முதலீட்டாளர்கள் பிரிவில் 14 மடங்கும், சிறு முதலீட்டாளர்கள் பிரிவில் 2.72 மடங்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒதுக்கீடு கிடைத்த முதலீட்டாளர்களின் டீமேட் கணக்கில் அக்டோபர் 27 அன்று பங்குகள் வரவு வைக்கப்பட்டிருக்கும். அக்டோபர் 28 காலை சந்தை தொடங்கியதும், சந்தை விலைக்கு விற்கவோ அல்லது கூடுதல் பங்குகளை வாங்கவோ முடியும்.

ஒரு பங்கின் வெளியீட்டு விலை ரூ.1,119 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது; ஆனால் தொடக்க விலை முதலீட்டாளர்களின் தேவையைப் பொறுத்து மாறக்கூடும். தற்போதைய கிரே மார்க்கெட் பிரீமியம் ரூ.244–ரூ.246 வரை காட்டப்படுவதால், ரூ.1,363–ரூ.1,365 வரம்பில் பட்டியலாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.