தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி, ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் திமுக முன்னாள் அமைச்சர் மகேஷ் (48) சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டதிலிருந்து மகேஷை புழல் சிறை வளாகத்துக்கு அழைத்துச் செல்லும் வரை போலீசாரை சூழ்ந்த திமுக ஆதரவாளர்கள், கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சிறையில் அடைப்பதற்கு முன், மகேஷ் ஆதரவாளராக குறிப்பிடப்படும் வேலூர் மாநகராட்சி கவுன்சிலர் டீட்டா சரவணன், ‘கரூர் சம்பவத்தின் போதே கதையை முடித்திருந்தால் இந்நிலை வந்திருக்குமா தலைவரே’ என ஆவேசமாக கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் புழல் போலீசார் டீட்டா சரவணன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர் வேலூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.