புதுடில்லி: உத்தரப் பிரதேசத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வான மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரியின் பதவிக்காலம் சமீபத்தில் முடிந்தது. அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததால் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு யூகங்கள் எழுந்தன.
இதற்கிடையில், மத்தியப் பிரதேசத்திலிருந்து சமீபத்தில் ராஜ்யசபாவுக்கு தேர்வான எல்.முருகன், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததுடன் எம்பி பதவியிலிருந்தும் விலகினார். இதனால் அந்த இடம் காலியானது.
இந்த காலியிடத்திற்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மத்தியப் பிரதேச ராஜ்யசபா இடைத்தேர்தலில் ஹர்தீப் சிங் புரி போட்டியிடுவார் என பாஜ அறிவித்துள்ளது.




