ஸ்பெயினில் ஏற்பட்ட நேருக்கு நேர் ரயில் மோதல் விபத்தில் 30 பயணிகள் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்களை மேற்கோள் காட்டி அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விபத்து டோலேடோ மாகாணத்தில் உள்ள லோஸ் யெபெனஸ்–உர்டா இடையிலான மாட்ரிட்–அண்டலூசியா அதிவேக ரயில் பாதையில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. மாட்ரிட்டில் இருந்து செவில்லே நோக்கிச் சென்ற ரயிலும், எதிர்திசையில் வந்த மற்றொரு ரயிலும் மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோதலின் பின்னர் இரு ரயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு தீப்பிடித்ததாக தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

உர்டா நகர மேயர் மானுவல் கலான், மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவசர மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார். விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை; விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

விபத்தின் எதிரொலியாக மாட்ரிட், சியுடாட் ரியல் மற்றும் அண்டலூசியா இடையிலான ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.