இந்திய விமானி கேப்டன் ஸ்மிட் மச்சார் இரண்டு முறை உயிருக்கு ஆபத்தான நிலையை கடந்து மீண்டதாக நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். முதலில் விமானத்தின் காக்பிட்டில் நடந்த தாக்குதலிலும், பின்னர் சிகிச்சை நேரத்திலும் அவர் கடுமையான சவால்களை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது.
டாக்டர்கள் கூறுகையில், அவரது தலையில் காணப்படும் தழும்புகள் தாக்குதல் எவ்வளவு தீவிரமானது என்பதை வெளிப்படுத்துகின்றன. காக்பிட்டிற்குள் இருந்தபோது கோடரியால் பலமுறை தாக்கப்பட்ட நிலையிலும் அவர் உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்யப்பட்ட அறுவை சிகிச்சை நேரமும் மிக உயர்ந்த அபாயம் கொண்டதாக நிபுணர்கள் குறிப்பிட்டனர். உடைந்த மண்டை ஓட்டிற்கு சிகிச்சை அளிக்கும் போது, முக்கிய ரத்த நாளில் காயம் ஏற்பட்டிருந்தால் பேரழிவு தரும் ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அவர்கள் எச்சரித்தனர்.
அமெரிக்காவை சேர்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், மூளையின் முக்கிய ரத்த நாளில் காயம் ஏற்பட்டால் உயிரிழப்பு அபாயம் 40% வரை இருக்கலாம் என மதிப்பீடுகளை சுட்டிக்காட்டினர். உடைந்த மண்டை ஓட்டுத் துண்டுகளை அகற்றும் போது வேகமாக ரத்த இழப்பு ஏற்படக்கூடும் என்றாலும், சிகிச்சைக்குப் பிறகு கேப்டன் ஸ்மிட் மச்சார் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டில்லி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையின் நரம்பியல் ஆலோசகர் டாக்டர் ராகுல் சாவ்லா, தலையில் ஏற்படும் காயங்கள் சில நேரங்களில் உள் ரத்தக் கசிவு, மண்டை ஓடு முறிவு அல்லது மூளை பாதிப்பை உருவாக்கக்கூடும் என்றும், வெளிப்புறக் காயத்தின் அளவை மட்டும் வைத்து தீவிரத்தை முடிவு செய்ய முடியாது என்றும் கூறினார்.




