சென்னை தலைமைச் செயலகத்தில் அக்டோபர் 29 அன்று முதல்வர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்குதல், பருவமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல், சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் மூன்று முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார். மக்களுக்கு என்ன தேவையோ அதற்கே முக்கியத்துவம் கொடுத்து, மக்களின் தேவைகளை அறிந்து அனைவரும் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், மக்களுக்கான சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என தெரிவித்தார். அதேபோல், மக்களின் அடிப்படை தேவைகள் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கூறினார்.

இந்த அமைச்சரவை கூட்டம் தொடர்பான பிரத்யேக வீடியோ தினமலர் இணையதளம் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.