சென்னை கிண்டி ஐடிஐ வளாகத்தில் புதிய திறன் பயிற்சி ஆய்வகங்களை அக்டோபர் 28 அன்று முதல்வர் விஜய் திறந்து வைத்தார். அங்கு காட்சிப்படுத்தப்பட்ட படைப்புகளை பார்வையிட்டு மாணவர்களை பாராட்டிய அவர், அவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
அந்த நிகழ்ச்சியின் போது மாற்றுத்திறனாளி இளைஞர் தினேஷ், வேலைவாய்ப்பு கோரி முதல்வரிடம் மனு அளித்தார்.
அந்த மனு உடனடியாக பரிசீலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அக்டோபர் 29 அன்று, திருவொற்றியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணையை முதல்வர் விஜய் தினேஷுக்கு வழங்கினார்.
இந்த நியமனம் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வாயிலாக வழங்கப்பட்டதாக செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஒரு சாமானிய மாற்றுத்திறனாளியின் கோரிக்கைக்கு செவிசாய்த்து ஒரே நாளில் நடவடிக்கை எடுத்ததன் மூலம் அவரது வாழ்க்கையில் நம்பிக்கையை விதைத்துள்ளதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.




