புதுடில்லி: ஜிஎஸ்டி விதிகள், வருமான வரி தாக்கல் காலக்கெடு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான நடைமுறைகள் தொடர்பாக மத்திய அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் சில நடவடிக்கைகள் நவம்பர் 1 முதல் அமலுக்கு வர உள்ளன.
பட்ஜெட்டில் கூறப்பட்டதுபோல், விற்பனைக்கு பிந்தைய தள்ளுபடிகளுக்கான ஜிஎஸ்டி விதிகளில் தளர்வு வழங்கவும், வணிக நிறுவனங்களுக்கான பணத் திருப்பிச் செலுத்தும் (ரீஃபண்ட்) செயல்முறையை விரைவுபடுத்தவும் நவம்பர் 1 முதல் நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு ஓய்வூதியதாரர்கள் ஆண்டுதோறும் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். 80 வயதிற்கு உட்பட்டோர் நவம்பர் 1 முதல் சமர்ப்பிக்கலாம். 80 வயதுக்கு மேற்பட்டோர் அக்டோபர் 1 முதல் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கான கடைசி நாள் நவம்பர் 30.
மாற்றுத்திறனாளி ஓய்வூதிய உதவிக்கான குறைந்தபட்ச உடல் குறைபாடு அளவை 80% இலிருந்து 40% ஆகக் குறைப்பதும், குறைந்தபட்ச வயதுத் தகுதியை நீக்குவதும் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் பெற்றுள்ளது. ஆனால் இது நவம்பரில் இருந்து அமல்படுத்தப்படுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
மேலும், 2026-27 ஆண்டுக்கான வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் அக்டோபர் 31 இலிருந்து நவம்பர் 21 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் 1ம் தேதி காஸ் விலை நிர்ணயம் செய்யப்படுவதாலும், நவம்பர் 1 விலை மாற்றம் குறித்து தற்போது எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.




