புழல் மற்றும் தேனி மாவட்ட சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிய சம்பவத்தின் எதிரொலியாக, தமிழக அரசு சிறைத்துறையில் முக்கிய நிர்வாக மாற்றங்களை அறிவித்துள்ளது.

அரசு உத்தரவின்படி, சிறைத்துறை டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டு, டான்ஜெட்கோ ஊழல் தடுப்பு பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அமலாக்கப்பிரிவு சிஐடியில் கூடுதல் டிஜிபியாக பணியாற்றும் சங்கர், சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்படுகிறார் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன், பிற ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் மாற்றுப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சஞ்சய் மாத்தூர் குற்ற ஆவண காப்பக டிஜிபியாகவும், சோனல் சந்திரா டிஜிபி அலுவலக ஐஜியாகவும், ரகுபதி கரூர் எஸ்பியாகவும், ஸ்டாலின் தென்காசி எஸ்பியாகவும், அசோக் குமார் மதுரை பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.