மனிதனுக்கு இருப்பது ஒரே வாழ்க்கை என்பதால், ஒரே நபர் இரண்டு ஆயுள் தண்டனைகளை அடுத்தடுத்து அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடுவது “முரண்பாடானது” மற்றும் பகுத்தறிவற்றது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிராவில் நடந்த கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில், விசாரணை நீதிமன்றம் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, அவற்றை தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், நீதிபதிகள் கே.வி. விஸ்வநாதன் மற்றும் அருண் பள்ளி அமர்வு மனுவை விரிவாக விசாரித்து தீர்ப்பளித்தது.
இருவேறு குற்றங்களுக்காக விதிக்கப்படும் ஆயுள் தண்டனைகளை அடுத்தடுத்து அனுபவிக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியது. அதே நேரத்தில், ஒவ்வொரு வழக்கும் அதன் சூழ்நிலைகளைப் பொருத்து மதிப்பிடப்பட வேண்டும் என்றும், ஒரு வழக்கில் தண்டனை குறைப்பு கிடைத்தாலும் மற்றொரு வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையின் தாக்கம் தானாகவே குறையாது என்றும் குறிப்பிட்டது.
இதன் அடிப்படையில், மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.




