தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் சுவாமி தரிசனம் செய்தார். இம்முறை கோவில் நடைமுறைகளின்படி தேவையான ஆவணச் செயல்முறைகளையும் பின்பற்றியதாக செய்தி வெளியாகியுள்ளது.
கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அமைச்சர், கடந்த அக்.10 அன்று கோவிலுக்குள் சென்றபோது ‘ஹிந்து மதத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்’ என்ற உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திடாமல் தரிசனம் செய்ததாக கூறப்பட்டது. இதனால், கையெழுத்து பெறாமல் அனுமதித்த அதிகாரிகள் மீது விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், கந்த சஷ்டி விழா நவ.10 முதல் 21 வரை நடைபெற உள்ளதை முன்னிட்டு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அமைச்சர் ஸ்ரீநாத் பங்கேற்றார்.
கூட்டத்திற்குப் பின்னர் கோவிலில் தரிசனம் செய்த அமைச்சர், அதிகாரிகளிடம் உறுதிமொழி படிவத்தை கேட்டுப் பெற்று முறைப்படி கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அவருடன் சென்ற கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த த.வெ.க. நிர்வாகிகளும் கையெழுத்திட்ட பின்னரே தரிசனத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்பட்டுள்ளது.




