தமிழக அரசு பல ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான இடமாற்றம் மற்றும் பணிநியமன உத்தரவை வெளியிட்டுள்ளது. இதில் திருப்பூர், தென்காசி, கரூர் மாவட்ட கலெக்டர்கள் மாற்றமும் இடம்பெற்றுள்ளது.
கரூர் கலெக்டராக இருந்த முத்துக்குமரன், திருப்பூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாநகராட்சி கமிஷனராக இருந்த மோனிகா ராணா, தென்காசி மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்கிறார்.
கரூர் மாவட்ட கலெக்டராக பிரசன்னா ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் கலெக்டராக இருந்த மனீஷ் நரவானே, பைபர் நெட் கார்பரேஷனுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும், பிரியா போக்குவரத்துத்துறையின் துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறையின் கூடுதல் செயலாளராக கார்த்திகாவும், அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின் கூடுதல் செயலாளராக வளர்மதியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்ட கைத்தறி மற்றும் பட்டு வளர்ப்புத்துறை இயக்குனராக சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.




