நடுவானில் ஏற்பட்ட அவசர சூழலில் பயணியர் உயிரைக் காப்பாற்றியதற்காக இந்திய விமானி கேப்டன் ஸ்மிட் மச்சார் மற்றும் ‘ப்ளை துபாய்’ விமான நிறுவன சிப்பந்திகளை யுஏஇ அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் விருது வழங்கி பாராட்டினார்.
அதிபரும் கேப்டன் மச்சாரும் பேசும் காட்சி இணையத்தில் வைரலாகி பலரது கவனத்தை பெற்றுள்ளது. அந்த வீடியோவில், “நீங்கள் எப்போது குணமடைவீர்கள்?” என்று அதிபர் கேட்க, மச்சார் “இரண்டு மாதங்கள் ஆகும்” என்று பதிலளிக்கிறார்.
இதையடுத்து, “ஒரு யோசனை இருக்கிறது; நீங்கள் குணமடைந்ததும் எப்படி சண்டையிடுவது என்று நான் உங்களுக்கு போர் பயிற்சி அளிக்க விரும்புகிறேன்” என்று அதிபர் கூறும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இதற்கு மச்சார், “இதுவே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம்” என்று பதிலளித்தார். மேலும் வைரலான மற்றொரு வீடியோவில், அதிபர் மச்சாரை கட்டிப்பிடித்து அவரது தலையில் உள்ள தையல்களை பார்ப்பதும் காணப்படுகிறது.
இந்த காணொளிகளை சமூக வலைதளங்களில் பலர் பகிர்ந்து, அதிபரின் அணுகுமுறையையும் விமானி மற்றும் சிப்பந்திகளின் செயல்பாட்டையும் பாராட்டி கருத்துகள் பதிவிட்டுள்ளனர்.




