ஹிந்து சமய அறநிலையத்துறையில் பணிபுரியும் 6 இணை கமிஷனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, துறை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரவின்படி, ராமு சென்னை-1 இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். ரேணுகாதேவி திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோயிலின் இணை கமிஷனராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
ரமணி தலைமையிடத்தில் இணை கமிஷனர் (சரிபார்ப்பு) பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார். அனிதா சென்னை மண்டலம்-3 இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், விஜயா திருவண்ணாமலை இணை கமிஷனராகவும், குமரதுரை காஞ்சிபுரம் இணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.




